[X] Close

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை

Congress-leader-Alagiri-meets-DMK-Chief-Stalin

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, குமரி அனந்தன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர்.


Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில், குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வந்தனர். அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிட விரும்புவதாகக் கூறியிருந்தது. காங்கிரஸ் கட்சியும், நாங்குநேரி தங்கள் தொகுதி என்பதால் தாங்களே போட்டியிடுவோம் என்று கூறியிருந்தது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close