ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவு நடத்தும் ரம்ஜான் விருந்து: வெறும் பால்தான் குடிக்கணும்!

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவு நடத்தும் ரம்ஜான் விருந்து: வெறும் பால்தான் குடிக்கணும்!
ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவு நடத்தும் ரம்ஜான் விருந்து: வெறும் பால்தான் குடிக்கணும்!

தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனது முஸ்லிம் பிரிவின் சார்பாக வரும் ரம்ஜான் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்தார் விருந்து கொடுக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் வெறும் பசும்பாலையும், பால் பொருட்களையும் மட்டுமே உண்ண வேண்டும் என்று கூறியுள்ளது.

பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் ரம்ஜான் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முஸ்லிம் பிரிவின் சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் பசும் பாலும், பால் பொருட்களும் மட்டுமே வழங்கப்படும் என்றும், பசுவை கொல்லக்கூடாது; மாட்டிறைச்சியால் நோய்கள் உருவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சிகளை நடத்துகிறது. 2002 ஆம் ஆண்டு முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (MRM) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் சங் பரிவாரின் கொள்கைகளை முஸ்லிம்களிடம் கொண்டு செல்ல அப்போதை தலைவர் கே.எஸ்.சுதர்ஷன் தொடங்கினார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ஒரு கிளாஸ் பால் குடித்து விரதத்தை முடிக்கும் நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறும் என்று இந்நிறுவனத்தின் அமைப்பாளர் மஹிராஜ் துவாஜ் சிங் தெரிவித்தார். பசுவின் பால் உடலுக்கு நல்லது என்றும், நெய் போன்ற பால் பொருட்களில் மருத்துவ குணங்கள் உள்ளன என்றும், பசு மாட்டுக்கறியை உண்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகும் போன்ற கருத்துகளைப் பரப்புவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com