[X] Close

போதையில் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்

son-in-law-murder-his-father-in-law

காஞ்சிபுரம் அருகே குடும்ப பிரச்சனையில் மாமனார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

காஞ்சிபுரம் அடுத்த திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ஷா. இவருக்கும், இவரது மருமகன் குமார் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் குமார், மது அருந்தி விட்டு பலமாக தாக்கியதில் கீழே விழுந்த மோகன்ஷா மயக்கமடைந்தார். அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏ.எஸ்.பி ஸ்ரீநாதா தலைமையில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close