ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் வரும் 28 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பரப்புரை நடைபெற்று வருகின்றது. ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பார்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற தேர்தல் பேரணி நடைபெற்றது. அப்போது இந்தக் கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதனைத் தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்தப் பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது. குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் அதிபர் அஷ்ரப் கனிக்கு எந்த பாதிப்பும் நேரிடவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதிச்செயலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!