சேலம் வசிஷ்ட நதியில் மணல் கொள்ளை நடந்து வருவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வற்றாத ஜீவ நதி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் வசிஷ்ட நதி, ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு பகுதி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி என பல்வேறு பகுதிகளுக்கு நீர் பாசன ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது வசிஷ்ட நதி வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதால், மணல் கொள்ளையர்கள் பகிரங்கமாக மணல் திருட்டில் ஈடுபடுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
வசிஷ்ட நதி செல்லும் ஆத்தூர், அம்மம்பாளையம், பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். இதனிடையே, வசிஷ்ட நதிக்கு மீண்டும் நீராதார வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் கைக்கான் வலவு திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், காவிரி உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. என்னதான் நீர் ஆதாரத்திற்கு வழிவகை செய்தாலும் வசிஷ்ட நதியில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்தால்தான் பயன்பெற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!