Published : 16,Sep 2019 01:41 PM
வீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி

கர்நாடகாவில் வீட்டுக்குள் புகுந்து காவல்காத்து வந்த நாயை, சிறுத்தை கவ்விக்கொண்டு செல்லும் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குஜராத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் சிங்கங்கள் வலம் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. சர்வசாதாரணமாக சாலைகளில் வலம் வந்த சிங்கங்களின் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அதேபோல் கர்நாடகாவில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
வீட்டின் சுற்றுப்புற சுவரை தாவிக்குதித்து சிறுத்தை ஒன்று செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவியின் பதிவாகியுள்ள அந்தக்காட்சியில் வீட்டின் மதில் சுவரை தாண்டி வீட்டுக்குள் சிறுத்தை நுழைகிறது. சிறிது நேரத்தில் வீட்டுக்காவலுக்கு நின்ற நாயை தன் வாயில் கவ்வியபடி வந்த வழியே மீண்டும் சிறுத்தை செல்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். வனவிலங்குகளின் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதன் விளைவு இது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
#WATCH Karnataka: A leopard entered a house and took away the owner's dog in Thirthahalli of Shivamogga district, yesterday. pic.twitter.com/z7H736ax51
— ANI (@ANI) September 15, 2019