Published : 21,May 2017 02:59 AM

தேனியில் பேய் மழை: போக்குவரத்து பாதிப்பு

heavy-rain-in-theni

கனமழை காரணமாக தேனி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கன மழை பெய்தது. பெரியகுளம் அடுத்த கைலாசப்பட்டி, லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் தேனி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் பகுதியில் மின்மாற்றி மீது மரம் விழுந்ததில், பெரியகுளம், கள்ளிப்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின்‌தடை ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்