Published : 21,May 2017 02:04 AM

ஃபைனல் மல்லுக்கட்டு: மும்பை-புனே விர்ர்ர்!

IPL-2017-Final-match-mumbai-vs-pune

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனல் போட்டியில் மும்பை - புனே அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தப் போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது. ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. நடப்பு சீசனுடன் ஒப்பந்தம் நிறைவடையும் புனே அணி முதன்முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியுடன் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களிலும், தகுதிச்சுற்றிலும் மும்பை அணியை, புனே அணி தோற்கடித்துள்ளது. இதனால் இறுதிப்போட்டி அதிக எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்