தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஆளும் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏவின் கார் மோதி சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தவர் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலத்தின் ஆளும் ராஷ்டிர சமிதி கட்சியின் கல்வகுர்தி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ஜெய்பால் யாதவ். இவர் தன்னுடைய இன்னோவா காரில் ஹைதராபாத்தில் இருந்து கல்வகுர்த்தியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ ஜெய்பால் யாதவின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த ஜகநாத் (40) என்பவர் மீது மோதியுள்ளது. இதில், ஜகநாத் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் அருகில் உள்ள பள்ளியில் கொத்தனாராக வேலைபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து நிகழ்ந்த போது எம்.எல்.ஏ ஜெய்பால் யாதவ் காரில் தான் இருந்துள்ளார். அவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மற்றொரு காரில் அங்கிருந்து அவர் கிளம்பி சென்றுவிட்டார். நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார் வேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என்று நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ ஜெய்பால் கார் விபத்தில் சிக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டும் ஒரு கார் விபத்தில் சிக்கினார். அப்போதும், நூலிழையில் உயிர் தப்பினார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!