சிறிதும் பெரிதுமாக 280 தீவுகளை உள்ளடக்கிய சுறுசுறுப்பான பிரதேசம். இது 60% இயற்கையால் சூழப்பட்டது. உலகம் முழுவதும் மிக அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் நகரங்களில் ஒன்றான ஹாங்காங், ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான சுற்றுலாத் தலம்.
ஹாங்காங் சிட்டியின் இரவு அங்காடிகளில் ஷாப்பிங் செய்வது தனி அனுபவம். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மிகப் பெரிய ஈர்ப்பு இந்த இரவு அங்காடிகள் தான். மேலும், குழந்தைகளைக் கவரும் ஓஷன் பார்க், மற்றும் டிஸ்னி லேண்டு ஹாங்காங்கின் சிறப்பம்சங்கள்.
ஹாங்காங்கின் இயற்கை துறைமுகம் இங்குள்ள கடல் வளத்துக்குச் சான்று. மேலும் ஹாங்காங்கில் கப்பல் பயணம் இங்கு சுற்றுலா வரும் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. வெள்ளி இரவு செல்லும் கப்பல் ஞாயிறு காலை வரை கடலில் நெடுந்தூரம் சென்று விட்டுத் திரும்புகிறது. ஏராளமான மலைகள் இருப்பதால் ஹைக்கிங் என்று சொல்லப்படும், மலையேற்றம் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
ஹாங்காங்கிலுள்ள கடற்கரைகள் மிகப் பிரபலம். தாய்லோங் கடற்கரை மிக அழகான கடற்கரையாக வர்ணிக்கப்படுகிறது.
மற்றொரு முக்கியமான தீவு, துங் பிங் சாவ். படிப்பாறைகளால் ஆன துங் பிங் சாவ் தீவு மக்கள் நடமாட்டம் குறைந்த தீவு. இது போன்று பல விதமான தீவுகள் ஹாங்காங்கில் வியாபித்திருக்கின்றன.இங்கு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை கோடை காலமும் மீதமுள்ள மாதங்கள் குளிர்காலமும் உடையது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்