[X] Close

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மரணம்

Photographer-Who-Shot-Iconic-Tiananmen-Square--Tank-Man--Dies-At-64

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த பத்திரிகையாளர் காலமானார்


Advertisement

1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சீன அரசு தியானன்மென் சதுக்கத்தை பீரங்கிகளால் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 


Advertisement

இந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. அரசின் இந்த தாக்குதலால் சீனாவே அச்சத்தின் மூழ்கியது. இதனை அடுத்து மிகப்பெரிய போராட்டத்தை அடக்கிய பீரங்கிகள் யாருமில்லா சாலையில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கையில் ஒரு காய்கறி கூடையுடன் சென்ற ஒரு சாமனியர், பீரங்கிகளின் முன் நின்று வழியை மறித்தார்.எத்தனை பேரைக் கொன்றாலும் எதிர்த்து நிற்க யாராவது வருவார்கள் என சொல்லாமல் சொல்லிய அந்த பாமரனின் புகைப்படத்தை அமெரிக்க பத்திரிகையாளர்கள் புகைப்படங்களாக எடுத்தனர். 

உலக அளவில் வைரலாக பரவிய அந்த திரைப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல பத்திரிகைகளும் கட்டுரைகள் எழுதின. பீரங்கியை வழிமறித்தவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது எதுவுமே தெரியாத நிலையில் அவருக்கு பீரங்கி மனிதன் என பத்திரிகைகள் பெயரிட்டன. 


Advertisement

அந்த புகைப்படத்தை தன் கேமராவுக்குள் கொண்டு வந்த உலகறிய செய்த ஒரு பத்திரியாளரான சார்லி கோல் கடந்த 5ம் தேதி காலமானார். இந்தோனேஷியாவில் வசித்து வந்த அவர் தனது 64 வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் காலம் கடந்து பேசும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்


Advertisement

Advertisement
[X] Close