[X] Close

தருமபுரி இயற்கை விதைத் திருவிழா - விவசாயிகள் ஆர்வம்

Natural-Seed-Festival-near-dharmapuri

தருமபுரியில் இயற்கை விதைத் திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகள் ஆர்வத்துடன் விதைகளை வாங்கி சென்றனர்.


Advertisement

தருமபுரியில் பூவிதம் பள்ளி மற்றும் மக்கள் மன்றம் இணைந்து இன்று விதை திருவிழாவை நடத்தினர். இந்தத் திருவிழாவில், பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், மூங்கில் அரிசி ஆகியவற்றின் விதைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் சூழல் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.


Advertisement

இந்த விதை திருவிழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட  தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து  இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவுக்கு வந்த இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறு தானியங்கள், தின்பண்டங்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.


Advertisement

Advertisement
[X] Close