மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வேலைவாய்ப்பு கேட்டு இடதுசாரி அமைப்பினர் நடத்திய அமைதி பேரணியை காவல்துறையினர் கலைக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்திய மாணவர் அமைப்பினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பினர் இணைந்து சிங்கூரில் இருந்து, தலைமைச் செயலகம் நோக்கி வேலைவாய்ப்பு கேட்டு அமைதி பேரணி நடத்தனர். ஹவுரா அருகே அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.
இதனால், பதிலுக்கு போராட்டக்காரர்களும் சண்டையிட முயன்றதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் காவல்துறையினர் அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
வேலைவாய்ப்பு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் அராஜகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என இடதுசாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்