[X] Close

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் காட்டம்!

Banner-issue--chennai-HC-condemns-Tamilnadu-Govt

’பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?’ என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாகக் கேட்டுள்ளது. 


Advertisement

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்தது.


Advertisement

(சுபஸ்ரீ)

இந்நிலையில் விதிகளை மீறி பேனர் வைப்பது தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ’விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? மனிதனின் வாழ்வுக்கு இங்கு சீரோ மரியாதைதான் கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயர் ரகு என்பவர் பேனரால் உயிரிழந்தார். இன்னும் எத்தனை பேர் உயிர்களை எடுக்க காத்திருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சி என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா? மாநில அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் நீதிமன்றம் அதை செயல்படுத்த தகுதியில்லை என்று நினைக் கிறீர்களா? நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close