Published : 20,May 2017 07:15 AM
தமிழகத்தில்தான் ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்: விஜயகாந்த்

ஓரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்கள் தேர்வாகியிருக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கீழடி அகழாய்வு இடத்தைப் பார்வையிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப்போயுள்ளது. நான்கு ஆண்டுகளை நிறைவு செய்வதற்காக அதிமுகவின் இரு அணிகளும் இணைய நினைக்கிறது. மக்கள் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்காத இந்த ஆட்சி விரைவில் கலைந்து பொதுத்தேர்தல் வரும் என்றார். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக காலூன்ற முடியாது எனவும் அவர் கூறினார். ரஜினியின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், ’ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை’என்று கூறினார்.