[X] Close

நளினியின் பரோல் நீட்டிப்பு மனு தள்ளுபடி

Nalini-s-parole-extension-petition-dismissed-by-MHC


நளினியின் பரோலை இரண்டாவது முறை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.


Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எழுவரில் ஒருவரான நளினி, தன் மகள் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் கோரி பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி இந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்புடன், வேலூர் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட நளினி தானே ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 வேலூர் சிறையிலிருந்து நளினி பரோலில் வெளியில் வந்தார். ஏற்கெனவே நளினிக்கு 3 வாரம் பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement

இந்நிலையில் இரண்டாவது முறையாக பரோலை நீட்டிக்க நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது மகளின் திருமண வேலைகள் இன்னும் முடியாதநிலை பரோலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆகவே வரும் 15ஆம் தேதி முடியும் அவரது பரோலை அக்டோபர் மாதம் 15 வரை நீட்டிக்க கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏற்கெனவே 7 வாரங்கள் பரோல் அளித்திருந்தால் தற்போது மீண்டும் 4 வாரம் நீட்டிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். எனவே நளினியின் பரோல் வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement
[X] Close