ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வாழும் இந்தியரான மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோஷிகா ஆகியோருடன் ஒகேனக்கல் வந்துள்ளார். இவர்கள் இன்று காலை பரிசலில் செல்ல விரும்பினர். முசல் மருவு என்ற இடத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி இவர்கள் மனோகரன் என்பவரின் பரிசலில் பயணித்தனர்.
அவர்களுடன் கார் ஓட்டுநர் கந்தனும் சென்றுள்ளார். அவர்கள் சென்ற பரிசல் நீலகிரி பிளேட் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பரிசலில் பயணம் செய்த அஞ்சலாட்சி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். மனோ, அவரது மகள் மோஷிகா, கார் ஓட்டுநர் கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து ஆற்றில் தத்தளித்தபடி இருந்தனர். அவர்களை பரிசல் ஓட்டி மனோகரன் மீட்டு கரை சேர்த்தார். தடையை மீறி பரிசல் இயக்கியதால் பரிசல் ஓட்டி மனோகரன் கைது செய்யப்பட்டார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்