[X] Close

ஆதார் கெடுவை நீட்டிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

Deadline-for-Aadhaar-not-to-be-extended

சமூக நல திட்டங்களை பெறுவதற்கு, ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான காலக்கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ”சமூகநலத் திட்டங்களால் பலன் அடைவதற்கு ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசின் நலத்திட்டங்களால் தகுதியற்றவர்கள் பலனடைவது தவிர்க்கப்படும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது” என்றார்.

இதற்கு நடுவில், மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டையுடன், பான் கார்டையும் இணைப்பது தொடர்பான விவகாரத்தையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் ஜூன் 27-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close