வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்!

வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்!
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளுக்கான கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும் டி-20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தனர். உலகக் கோப்பை தொடரில் அந்த அணி ஆடிய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடரில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் அந்த அணியின் கேப்டன்களை மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, கடைசியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார் பொல்லார்ட். பிறகு அவரை அணியில் சேர்க்கவில்லை. டி-20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடருக்குத்தான் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com