[X] Close

பணம் கேட்டு தாயைக் கொன்ற மனநலம் பாதித்த மகன்

son-killed-his-mother-in-tirupur

திருப்பூரில் பணம் கேட்டு பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருப்பூர் காசிபாளையம் மணியக்காரம்பாளையம் சாலையை சேர்ந்தவர் ஆரோக்யமேரி. இவர் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். கணவரை இழந்த ஆரோக்கியமேரிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்க, மற்றொரு மகள் கோவையில் தங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் ஆரோக்யமேரி அவரது மகன் ஹர்சித்துடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் நிறுவனம் செயல்பட மேல் தளத்தில் வசித்து வந்தனர். 

இந்நிலையில் ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டு பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆரோக்யமேரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பணியாளர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். 


Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஹர்சித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் தாயை கொன்றது தெரியவந்துள்ளது என போலிசார் தெரிவித்தனர்.

Related Tags : sonkilledmothertirupurதாய்கொலைமகன்கைது

Advertisement

Advertisement
[X] Close