[X] Close

''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய  பியான்கா

US-Open-winner-apologises-to-crowd--says--I-know-you-wanted-Serena-to-win

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடாவின் பியான்கா, அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவின் பியான்கா விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பியான்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-5 என்ற நேர் செட்‌ கணக்கில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை, பியான்கா வீழ்த்தினார். இதன் மூலம் 19 வயதான ‌பியான்கா, அறிமுகமான முதல் அமெரிக்க ஓபன் தொடரிலேயே பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். 


Advertisement

இந்நிலையில் வெற்றிக்கு பின் அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு முன் பேசிய பியான்கா அவர்களிடத்தில் மன்னிப்பு கோரினார். அப்போது பேசிய அவர், '' எனக்கு தெரியும் நீங்கள் அனைவரும் செரீனா வில்லியம்ஸ் வெற்றியடைய வேண்டுமென்றே விரும்பினீர்கள். அவருக்காகவே கரவோஷம் எழுப்பினீர்கள். ஆனால் என்னை மன்னித்துவிடுங்கள் என தெரிவித்தார். மேலும் தன்னுடைய வெற்றிக்குறித்து கண் கலங்க நெகிழ்ச்சியான தருணத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.


Advertisement

Advertisement
[X] Close