6-ம் வகுப்பு கேள்வித்தாள் சர்ச்சை - கேந்திரிய வித்யாலயா விளக்கம்

6-ம் வகுப்பு கேள்வித்தாள் சர்ச்சை - கேந்திரிய வித்யாலயா விளக்கம்
6-ம் வகுப்பு கேள்வித்தாள் சர்ச்சை - கேந்திரிய வித்யாலயா விளக்கம்

சமூக வலைத்தளங்களில் கேந்திரிய வித்யாலயா கேள்வித்தாள் என பரவும் செய்தி உண்மையில்லை என கேந்திரிய வித்யாலயா தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் அந்த வினாத்தாளில் முன் வைக்கப்பட்டிருந்தன. அந்த வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் கேந்திரிய வித்யாலயா கேள்வித்தாள் என பரவும் செய்தி உண்மையில்லை என கேந்திர வித்யாலயா விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இது போன்ற கேள்வித்தாள் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com