லேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்..!

லேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்..!
லேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்..!

அடுத்த 14 நாட்களுக்குள் லேண்டரின் தொடர்பை பெற முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

தூர்தர்ஷனுக்கு பேட்டியளித்த அவர், லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்றார். அறிவியல் என்பது சோதனை செய்வது என்பதால், இந்த தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து சிறப்பாக பணியில் ஈடுபடும்படி பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியுள்ளார் என்றும், எனவே, முன்பை விட அறிவியல் ஆய்வுகளில் இஸ்ரோ சிறப்பாக பணியாற்றும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக சந்திரன் தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து முனைப்பு காட்டப் போவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. சந்திரனில் லேண்டர் இறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில் இஸ்ரோ தரப்பில் இவ்வாறு விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சந்திரயான் - 2 திட்டத்தில் 90 முதல் 95% இலக்குகள் எட்டப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com