
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி, வரும் 9-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி, வரும் 9-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிலையம் அருகே பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே செப்டம்பர் 9-ஆம் தேதி அவசர பொதுக்குழு கூட்டத்திற்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அந்தக் கூட்டத்திலும் தலைமை நீதிபதி பணியிட மாற்றப்பட்டது மற்றும் பதவி விலகல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.