ஆஷஸ் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை, சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 வது போட்டி, இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சரின் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட ஸ்மித், ஓய்விற்கு பின் இந்தப்போட்டியில் களமிறங்கினார். இதில் தனது 26ஆவது சதத்தை கடந்த அவர், குறைவான இன்னிங்ஸில் 26 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில், 2வது இடம் பிடித்துள்ளார்.இந்தப்பட்டியலில் 2-வது இடத்திலிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, ஸ்மித் முறியடித்துள்ளார். சச்சின் 136 இன்னிங்ஸில் 26 சதங்களை எட்டியிருந்தார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் 121 இன்னிங்ஸில் 26ஆவது சதத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித், தனது மூன்றாவது இரட்டை சதத்தையும் பதிவு செய்தார்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ஸ்மித்தை புகழ்ந்துள்ளார். தனது ட்விட்டரில், ‘சிக்கலான தொழில்நுட்பம் ஆனால் ஒழுங்கான மனநிலை, இதுதான் எல்லாவற்றையும் தாண்டி ஸ்மித்தை வேறுபடுத்திக் காண்பிக்கிறது. நம்பமுடியாத மறுபிரவேசம்’ என தெரிவித்துள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்