
ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்தது ஏன் என மனுதாரர் முனிகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் டாஸ்மாக்கிற்கு குடிக்க செல்பவர்களை தடுக்க மனுதாரர் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பினர்.
உரிய ஆதாரம் இல்லாமல் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.