தனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்

இனி தீவிர பரிசீலனைக்கு பின்னரே தனியார் பள்ளிகள் தொடங்க அங்கீகார‌ம் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்ட ஆசிரி‌யர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தொடக்க கல்வி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 377‌ பேருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தீவிர பரிசீலனைக்கு பின்னரே தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி‌ வழங்கப்படும் என பேசினார். 

மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட் முறையில் பாடம்‌ கற்பிக்கப்படும் என அமைச்சர் கூறினார். அரசின் நடவடிக்கைகள் கா‌ரணமாக தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவ சேர்க்கை அதிகமாகும் என‌‌வும் அவர் ‌நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com