இந்து மத உணர்விற்கு எதிராக நெட்ஃப்ளிக்ஸ் தளம் செயல்படுவதாக சிவசேனா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு புகார் அளித்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தளம் பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை தனது தளத்தில் தந்துவருகிறது. இதனை வாடிக்கையாளர்கள் மாத சந்தா அல்லது வருட சந்தா செலுத்தி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இத் தளத்தில் வரும் சில நிகழ்ச்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் சில நிகழ்ச்சிகள் இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாக சிவசேனா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், “நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் சில நிகழ்ச்சிகள் இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது. அத்துடன் அவை சரியான நோக்கத்தில் இல்லை. ஆகவே இந்தத் தளத்தை முறைப்படுத்த சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதற்கு முன்பு டெல்லி பாஜகவின் செய்தி தொடர்பாளர் நெட்ஃப்ளிக்ஸ் குறித்து புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரிலும் சில நிகழ்ச்சிகள் சீக்கிய மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் தளம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பெங்களூருவில் பிரதமர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலைகள்.. ஒரே வாரத்தில் பரிதாப நிலை!
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி