Published : 13,Jan 2017 09:27 AM
தடையை அமல்படுத்துங்கள்.. பீட்டா

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை முறைப்படி அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் எனவும் பல அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமலாவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.