Published : 04,Sep 2019 08:54 AM
“கணினி ஆசிரியர் தேர்வு ஏன் தமிழில் நடக்கவில்லை” - உயர்நீதிமன்றம் கேள்வி

கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கேள்வி எழுப்பியது. மேலும் இதுகுறித்து வரும் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.