[X] Close

 “சிவக்குமார் விடுதலை ஆவதே எனக்கு மகிழ்ச்சி” - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

-Not-Happy--Pray-He-Is-Out-Soon---BS-Yediyurappa-On-DK-Shivakumar-Arrest

சிவகுமார் விடுதலை ஆகிவிட்டார் என்ற செய்திதான் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 


Advertisement

கடந்த 2017-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா அரசில் அமைச்சராக இருந்தவர் டி கே சிவக்குமார். அப்போது அவரின் டெல்லி வீடு மற்றும் கர்நாடகாவிலுள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சிவக்குமாரின் வீட்டிலிருந்து 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் ஹவாலா பணம் என அமலாக்கப் பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.


Advertisement

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டி.கே சிவக்குமாருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சிவக்குமார் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். 5 நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ``இறுதியாக என்னைக் கைது செய்யும் மிஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பா.ஜ.க நண்பர்களுக்கு வாழ்த்துகள். வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்கு பலிகடா ஆகியவன் நான்” எனப் பதிவிட்டார். 


Advertisement

இந்தியா மோசமான பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் சிவக்குமாரை பழிவாங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல நினைக்கிறேன். டி.கே சிவகுமாரின் கைது எனக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சி தரவில்லை. அவர் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். சிவகுமார் விடுதலை ஆகிவிட்டார் என்ற செய்திதான் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்” எனத் தெரிவித்தார். 


Advertisement

Advertisement
[X] Close