Published : 03,Sep 2019 03:30 PM

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது

Former-congress-Minister-dk-shivakumar-arrested

பண மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா அரசில் அமைச்சராக இருந்தவர் டி கே சிவக்குமார். அப்போது அவரின் டெல்லி வீடு மற்றும் கர்நாடகாவிலுள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சிவக்குமாரின் வீட்டிலிருந்து 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணம் என அமலாக்கப் பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டி.கே சிவக்குமாருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சிவக்குமார் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்