Published : 03,Sep 2019 01:46 AM
“ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுங்க” - காவல்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்

காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போதை இளைஞர் காவல்நிலையத்தில் செய்த ரகளையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில், விக்கி என்ற கீரிப்புள்ள என்பவர் வசித்து வருகிறார். நள்ளிரவில் பூந்தமல்லி காவல்நிலையத்திற்குள் போதையில் புகுந்த அவர், காவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை காதலித்த பெண் ஒருவர், இப்போது காரணமே இல்லாமல் காதலை நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளார்.
திடீரென ஆவேசமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, சாலையில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். தான் அந்த பெண்ணுக்காக செலவு செய்த 3 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போதை தெளிந்தபின் புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.