மேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று பந்த்-துக்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சியாம்நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து பாரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் அங்கு வந்தார். இதையடுத்து அங்கு கடும் மோதல் ஏற்பட்டது.
அவரது காரை அடித்து நொறுக்கிய திரிணாமுல் தொண்டர்கள், அர்ஜூன் சிங்கையும் தாக்கினர். இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜகவினர் புகார் கூறினர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநில பாஜக, 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பந்த்-துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்