[X] Close

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த் பேச்சு

rajinikanth-speech

போர்வரும்போது பார்த்துக்கொள்ளலாம், அதுவரை அமைதி காப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று கூறினார்.

ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துவருகிறார் ரஜினிகாந்த். இன்று கடைசி நாள் என்பதால் ரசிகர்கள் முன் அவர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

முதல்ல உங்களுக்கெல்லாம் நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, இவ்வளவு கட்டுப்பாடா இருந்தது, பழகினதுக்கு நன்றி. ஒழுக்கம்தான் வாழ்க்கையில முக்கியம். அது இல்லைன்னா முன்னேற முடியாது. அதை தெளிவா கடைப்பிடிச்சீங்க. தொடர்ந்து அதை கடைபிடிங்க.


Advertisement

மீடியா என்னை விரட்டுவிரட்டுன்னு விரட்டினாங்க. நானும் சென்னையெல்லாம் சுத்திட்டேன். ஏன்னா, நாலஞ்சு வார்த்தை நான் பேசினாலே சர்ச்சையாகுது. இன்னும் பேசிட்டே இருந்தா இன்னும் சர்ச்சையாகிட்டே இருக்கும். அதனால ஊடகங்களை தவிர்த்தேன். தப்பா நினைக்க வேண்டாம்.

நான் முதல் நாள் பேசும்போது, நான் நாலு வார்த்தை சொன்னேன். ஒருவேளை அரசியலுக்கு வரலாம்னு நான் சொன்னது இவ்வளவு பெரிய வாதமா ஆகும்னு நினைக்கல. வாத விவாதங்கள் இருக்கலாம், எதிர்ப்பு இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது. அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். ஆனால், சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதும்போது எனக்கு கஷ்டமா போயிடுது. ஏன் தமிழ்மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிடறாங்க, வார்த்தைகளை பயன்படுத்தறதுல, அப்படின்னு வருத்தம். நான் தமிழனாங்கற கேள்வி வருது. எனக்கு இப்ப 67 வயது ஆகுது. 23 ஆண்டுதான் கர்நாடகத்துல இருந்தேன். மிச்ச 44 ஆண்டுகள் இங்க, உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டியனாகவோ, கர்நாடகக்காரனாவோ வந்திருந்தா கூட எனக்கு பணத்தையும் புகழையும் அள்ளிக்கொடுத்து நீங்க. என்னை தமிழனாகவே ஆக்கிட்டாங்க. ஸோ, இப்ப நான் பச்சைத்தமிழன். என் மூதாதையர்கள்லா, நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரியில் பிறந்தவங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். என்னைய எங்கயாவது போன்னு சொன்னா, நான் இமயமலைல போய்தான் விழுவேனே தவிர, வேற எந்த மாநிலத்துலயும் போய் விழமாட்டேன். ஏன்னா, நல்ல தமிழ்மக்கள் இருக்கிற இங்க இருக்கணும், இல்லைன்னா, சித்தர்கள் இருக்கிற இமயமலைல இருக்கணும். என்னை வாழ வச்சீங்க. என்னை வாழ வைச்ச தெய்வங்கள், நல்லா இருக்கக் கூடாதா? அப்படின்னு நினைக்கிறது என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியலை. சரி, நீயென்ன கரெக்ட் பண்றது? அதுக்கு மத்தவங்க இருக்காங்கன்னு சொன்னா, யெஸ். மத்தவங்க இருக்காங்க.

மத்தவங்க இருக்காங்க. தளபதி முக. ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவர்கிட்ட சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு சொல்வாங்க. திருமாவளவன் தலித்துக்கு ஆதரவா குரல் கொடுத்து உழைச்சிட்டிருக்கார். சீமான் போராளி. அவர் கருத்துகள்கேட்டு பிரமிச்சுப் போயிருக்கேன். இருக்காங்க. ஆனா, சிஸ்டம் கெட்டுப்போயிருக்கே. ஜனநாயகமே கெட்டுப்போயிருக்கே. மக்களின் மனவோட்டமே மாறியிருக்கே. அதனால ஒரு மாற்றத்தை உண்டாக்கணும். அப்பதான் நாடு உருப்படும். அதை எல்லாரும் சேர்ந்து பண்ண வேண்டியது.


Advertisement

என் ரசிகர்கள் எதிர்ப்பு வந்தால், பாதிக்கப்பட வேண்டாம்.

ஒரு வாட்டி புத்தர் பயணம் போயிட்டிருந்தார். அப்போ ஏழெட்டு பேர் அவரை வழிமறித்து கன்னாபின்னான்னு திட்டினாங்க. புத்தர் அமைதியா இருந்தார், சிரிச்சுட்டே இருந்தார். அவர் போனபிறகு சீடர்கள் கேட்டாங்க. அவங்க அவ்வளவு திட்டுறாங்க. பேசாம இருக்கீங்களேன்னு. அவங்க திட்டிட்டு கொட்டிட்டு போயிட்டாங்க. அதை நான் எடுத்துக்கலயே. அவங்களே எடுத்துட்டு போயிட்டாங்களான்னு சொன்னார்.

பழைய காலங்கள்ல எப்படின்னா, ராஜாக்கள்ட்ட படைபலம் இருக்கும். நிறைய பேர் இருக்கமாட்டாங்க. ஆனா, போர்ன்னு வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க. மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. வீர விளையாட்டுகள் எல்லாம வச்சது, அவங்க உடலை பலப்படுத்தணும்னுதான். அவங்க கடமையை செஞ்சுட்டே இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காகப் போராடுவாங்க. அது போல எனக்கும் கடமை, இருக்கு. தொழில் இருக்கு. நீங்களும் ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. போர்னு வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருப்பான். நன்றி.


Advertisement

Advertisement
[X] Close