Published : 19,May 2017 03:33 AM

காதலன் மீட் பண்ணலையே: ஐடி காதலி தற்கொலை!

IT---suicide-case

தன் காதலன் தன்னைச் சந்திக்க வரவில்லை என்பதால் இளம் பெண் ஒருவர் தனது வீட்டின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள கோந்த்வாவைச் சேர்ந்தவர் ஜூஹி நிதின் காந்தி. வயது, 23. பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது அம்மாவுக்கு ஆபரேஷன் ஒன்று நடக்க இருந்ததால் மூன்று நாட்கள் லீவில் சொந்த ஊருக்கு வந்தார். வந்ததும் அவரது காதலருக்கு போன் செய்தார். கடந்த புதன்கிழமை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்துவரும் காதலரால் ஜூஹியை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து ஜூஹி போன் செய்ய, அதை தவிர்த்து வந்தாராம் காதலன். மனம் உடைந்த ஜூஹி தனது வீடு இருக்கும் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து போலீசார் அவர் காதலரிடம் விசாரித்தபோது, தனக்கு எக்ஸாம் இருந்ததால் சந்திக்கவில்லை என்றும் அவசரப்பட்டு இப்படிப் பண்ணிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்