
ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுவதாக முனிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.