Published : 30,Aug 2019 10:47 AM
சிபிஐ காவலில் இருக்க தயார் : ப.சிதம்பரம் பதிலால் காவல் நீட்டிப்பு

சிபிஐ காவலில் திங்கட்கிழமை வரை இருக்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதையடுத்து அவரது காவலை நீதிமன்றம் நீட்டிப்பு செய்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கின் விசாரணை இன்று டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. எதிர்தரப்பு வாதத்தை பதிவு செய்த சிதம்பரம் தரப்பு, சிபிஐ காவலை எதிர்த்து தொடர்ந்து வழக்கு செப்டம்பர் 2ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என தெரிவித்தது.
அத்துடன், செப்டம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என ப.சிதம்பரம் தெரிவித்தார். 400க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். எந்த ஆவணமும், ஆதாரமும் எனக்கு எதிராக இல்லை. என ப.சிதம்பரம் கூறினார். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை திங்கட்கிழமை வரையில் நீட்டிப்பு செய்து நிதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ கோரிக்கை ஏற்று உத்தரவு காவலில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.