தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.
மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஃபிட் இந்தியா இயக்கத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உடற்பயிற்சி செய்வோம் என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியையும் அங்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமானது என்பதால் அதை நாள்தோறும் தவறாமல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தை நாடு முழுவதும் பரப்பும் விதமாக விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தலைமையில் 28 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பாலிவுட் நடிகர்கள் ஷில்பா ஷிட்டி, மிலிந்த் சோமன், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாரதிய ஜனதா எம்பியுமான கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞர் நலத்துறை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியின் இடையே ஃபிட் இந்தியா இயக்கத்தின் பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். உடற்பயிற்சி குறித்து விளக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?