[X] Close

காவல்நிலைய வளாகத்திற்குள் தீக்குளித்த தம்பதி - மூவர் பணியிடை நீக்கம் 

Couple-Set-Themselves-On-Fire-Inside-Police-Station-In-UP

காவல்நிலைய வளாகத்திற்குள் சென்று தீயிட்டுக் கொண்ட தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

உத்திரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர். அவரது மனைவி சந்த்ரா. இவர்கள் அப்பகுதியில் உள்ள கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள சிலர் நில ஆக்கிரமிப்புக்காக ஜோகிந்தர் மற்றும் சந்த்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையே இருதரப்புக்கு இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 


Advertisement

கைகலப்பில் நில அபகரிப்பு கும்பல் ஜோகிந்தரின் தலையை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோகிந்தர்  காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த புகாரை போலீசார் விசாரிக்கவில்லை  என்று கூறப்படுகிறது. போலீசாரின் நடவடிக்கையால் மனமுடைந்த ஜோகிந்தர், அவரது மனைவி சந்த்ரா ஆகியோர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சுரீர்  காவல் நிலைய வளாகத்திற்குள் சென்றனர். உடனடியாக மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றனர். 

உடலில் பரவிய தீயை அணைத்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் தம்பதி சிகிச்சை பெற்று வருகின்றனர். தம்பதி தீ வைத்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close