[X] Close

“மறக்க முடியாத அளவு பதிலடி” - பாகிஸ்தானை எச்சரித்த வெங்கையா நாயுடு

Fitting-Reply-Which-They-Won-t-Forget-says-Venkaiah-Naidu-s-Warning-To-Pak

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், எந்தவொரு நாட்டையும் இந்தியா அநாவசியமாக தாக்கியதில்லை என கூறினார். முதிர்ச்சி இல்லாத சில நாடுகள் தான் இந்தியா மீது முதலில் தாக்குதலை நடத்தியதாகவும் பேசினார். இந்தியா மீது ஏதேனும் ஒரு நாடு தாக்குதலை நடத்த முயற்சித்தால், வாழ்நாளில் மறக்க முடியாது அளவுக்கு நிச்சயம் தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும் வெங்கையா நாயுடு எச்சரித்தார்.


Advertisement

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதில் இருந்து, பாகிஸ்தான் அரசு கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவைத் தவிர பிற உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், இது இரு நாட்டு விவகாரம் என கூறி, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது என கைவிரித்து விட்டது. இதனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close