Published : 13,Jan 2017 08:35 AM

சிட்டி இல்லை...ஜியா ஜியா... அதிசயங்கள் செய்யும் சீனாவின் பெண் ரேபோ...

China-introduced-first-human-like-robot

நேர்த்தியான தொழிநுட்பத்தில் பல நவீன கருவிகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

எந்திரன் படத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்ட சிட்டியைப் போல நிஜத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ ஒரு பெண்.. அதன் பெயர் ஜியா ஜியா...

மனிதர்களை போன்று உருவமும், அனைத்து வேலைகளையும் செய்யும் திறனையும் உடைய ரோபோவை உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டு முதல் சீனா ஈடுபட்டது. இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு ‘ஜியா ஜியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோபோவை நிஜமான பெண்ணை போன்று நேர்த்தியான ஆடை, அழகான தோற்றம், கருமையான கூந்தல் என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ குறித்து சின் ஷியாபிங் கூறுகையில், சாதாரண கேள்விகளுக்கு, எதிரில் இருப்பவரின் பாலினத்திற்கு ஏற்ப பதிலளிக்கும் இந்த ரோபோ. அதுமட்டுமின்றி சொன்ன வேலைகளை துரிதமாக செய்யும். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் இதற்கு கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்