Published : 18,May 2017 10:33 AM

டிடிவி தினகரனின் குரல் மாதிரி சோதனைக்கு அனுமதி

delhi-court-allows-Dinakaran-s-voice-sample-test

டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய டெல்லி காவல்துறைக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீஸ் கோரிக்கை வைத்திருந்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்ற டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் இருவரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக

டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றம் வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தினகரனி்ன் நண்பர் மல்லிகார்ஜூனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்