Published : 27,Aug 2019 03:33 AM

தெலங்கானா பாஜக தலைவர் மகன் லண்டனில் மாயம்

23-Year-old-son-of-Telangana-bjp-leader-goes-missing-in-UK

தெலங்கானாவை சேர்ந்த பாஜக தலைவர் உதய் பிரதீப், மகன் இங்கிலாந்தில் மாயமாகியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கம்மன் மாவட்ட பாஜக பிரிவின் தலைவர் உதய் பிரதீப். இவரது மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா. 23 வயதாகும் இவர் இங்கிலாந்தில், இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ். படித்து வந்தார். தினசரி பெற்றோருடன் தொலைபேசியில் பேசிவிடும் உஜ்வால், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் பேசவில்லை.

இதனையடுத்து மகன் மாயமானது தொடர்பாக உதய் பிரதீப், லண்டன் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது உஜ்வாலின் பை மட்டும் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மத்திய உள்துறை இணை அமைச்சரான கிஷான் ரெட்டி இவ்விவகாரத்தில் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்