புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சியில் பெண்ணை கொலை செய்து கண்மாயில் புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 100 நாள் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாண்டிச்செல்வியை காணவில்லை என அவரது தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி. தமிழ்மாறன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டிச்செல்வியை தேடி வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாண்டிச்செல்வியின் கணவருக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்தது. அதில் பேசியவர் தனது பெயர் ரெங்கையா என்றும், பாண்டிச்செல்வியை தான் கொலை செய்துவிட்டதாகவும், அதற்காக தம்மை மன்னித்துவிடும்படியும் கூறியிருந்தார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டிச்செல்வியின் கணவர் தனது மாமனார் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ரெங்கையாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தமக்கும் பாண்டிச்செல்விக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறிய ரெங்கையா கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து ரெங்கையாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வாழைக்குறிச்சி கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த பாண்டிச்செல்வியின் உடல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide