Published : 24,Aug 2019 03:04 AM
பட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் மேட்டமலைக் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில், காரில் இருந்து எடுத்து வரப்பட்ட பட்டாசுகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில், கடையின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சாத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.