
ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 82 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 82 வயது. இவர் தனது பதவிக் காலத்தின்போது, இளநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் நேரத்தில் படிக்க திட்டமிட்ட சவுதாலா, இந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதி, அதில் ஏ கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர், பட்டப்படிப்பு படிக்கத் திட்டமிட்டுள்ளார்.