[X] Close

சிபிஐ கொடுத்த முதல் நாள் இரவு உணவை புறக்கணித்த ப.சிதம்பரம்

P-Chidambararam-rejects-CBI-Food

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலின்‌ முதல் நாளில் இரவு உணவு எடுத்துக்கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் இருக்கிறார். கைது செய்யப்பட்ட நாளன்று அவருடைய இரவுப்பொழுது எவ்வாறு கழிந்தது என்பது குறித்து சில தகவல்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால்‌ நேரு‌ விளையாட்டு அரங்கத்தின் அருகே உள்ள சிபி‌ஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் முதல் நாள் இரவை கழித்தார். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஐந்தாம் எண் கொண்ட அறையில் இரு சிபிஐ அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு‌ பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் 24 மணி நேர கண்காணிப்பில் அவர் இருந்துள்ளார்.


Advertisement

இரவு உணவுக்கு வீட்டுச் ‌சாப்பாடு வேண்டும் என்ற அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் வழங்க முடியாது என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அன்றைய தினம் இரவு சிபிஐ விருந்தினர் மாளிகையில் இருந்து உணவு வரவழைக்கப்பட்‌டது. ஆனால் அதை ப.சிதம்பரம் உண்ண மறுத்துவிட்டார்.

சிபிஐ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பேச்சு கொடுத்த போதும் அவர் அவ்வளவாகப் பேசவில்லை. சிதம்பரம் வழக்கமாக உட்கொள்ளும் உணவு குறித்து மருத்துவர்கள் குறிப்பெடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close