Published : 17,May 2017 11:43 AM

சிகிச்சைக்கு பணம் அளிக்க மறுத்த தந்தை... மன்றாடி மரணமடைந்த சிறுமி

Video-shows-13-year-old-girl-begging-dad-for-money-to-treat-cancer

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தனது சிகிச்சைக்காக பணம் அளிக்க தந்தையிடம் கெஞ்சும் வீடியோ அவளது மரணத்திற்குப் பின் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாய் ஸ்ரீக்கு எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை பெற 40 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இதற்கு பணம் இல்லாததால், அவரது தாய் சுமா வீட்டை விற்று பணம் திரட்ட முயற்சித்தார்.

ஆனால், சுமாவை விட்டு பிரிந்து வாழும் அவளது தந்தை சிவகுமார், தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ போண்டா உமா மகேஷ்வர ராவின் உதவியுடன் வீட்டை விற்க தடை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக பணம் அளிக்க வேண்டும் என தந்தையிடம் சாய் ஸ்ரீ கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அம்மா பணத்தை எடுத்துக் கொள்வார் என்று நினைத்தால், நீங்களே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் வேண்டினார். ஆனால், தந்தை அதை ஏற்காததால், கடந்த 14-ம் தேதி அந்த சிறுமி உயிரிழந்தார்.

சாய் ஸ்ரீ தந்தையிடம் கெஞ்சிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்