Published : 20,Aug 2019 07:59 AM

முல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்

madurai-hight-court-notice-to-kerala-government-about-mullai-periyar-dam-issue

முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் தரப்பில், "முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு மத்திய காவல்துறை படையை நியமனம் செய்யக்கோரியும், அணைப் பகுதியின் நீர்பிடிப்பு பகுதியான 136 முதல் 152 அடி வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  வழக்கினைத் தாக்கல் செய்த விஜயகுமார் இறந்துவிட்ட காரணத்தால், தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் தலைவரான ரெங்கன் என்பவரை இந்த வழக்கில் சேர்க்க அனுமதி கோரினார். அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அரசுத்தரப்பில் இதே போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், "உச்சநீதிமன்றத்தில் 152 அடிக்கு மேலுள்ள, கேரள அரசின் வரம்பிற்குட்பட்ட பகுதியிலுள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளது. இந்த வழக்கு தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட 136 அடி முதல் 152 அடி வரையிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்கு. மத்திய அரசுத்தரப்பில் 2006 நவம்பரில் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளிக்கப்பட்ட ரகசிய அறிக்கையிலேயே ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்